இத்தாலி தேர்தல்: ரோமின் முதல் பெண் மேயர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு

இத்தாலியின் மிக பெரிய நகரங்களின் குடிமக்கள் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர். எட்டு மில்லியன் இத்தாலியர் வாக்களிக்க பதிவு செய்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஐந்து நட்சத்திர இயக்கத்தின் எழுச்சிமிகு நடசத்திரமாக ராக்கி பார்க்கப்படுகிறார்

ரோம் நகர புதிய மேயருக்கான போட்டி தான் மிகவும் கவனிக்கப்படுகிறது.

இங்கு மக்களின் தேவைகளுக்காய் குரல் கொடுக்கும் ஐந்து நட்சத்திர இயக்கத்தின் வெர்ஜீனியா ராக்கி அம்மையார், பிரதமர் மாட்டியோ ரென்சியின் ஜனநாயக கட்சியின் மூத்த அதிகாரியான ரோபர்டோ கியசெட்டிக்கு எதிராக மேயர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கியசெட்டி

இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற முதல் சுற்று வாக்கெடுப்பில் 37 வயதான ராக்கி அம்மையார் 35 சதவீத வாக்குகளை பெற்றிருந்தார். கியசெட்டியோ 24 சதவீதமே பெற்றிருந்தார்.

ராக்கி அம்மையார் தேர்ந்தெடுக்கப்பட்டால் ரோமின் முதல் பெண் மேயராக இருப்பார்.

தொடர்வண்டிகள், குப்பைகள் சேகரிப்பு ஆகிய சர்ச்சைகளால் ரோமானியர்களின் வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகரின் நிர்வாகமோ ஊழல் குற்றச்சாட்டுக்கள், மாஃபியாவோடு இணைந்து இயங்குகிறார்கள் போன்ற குற்றச்சாட்டுகளால் சீர்குலைந்துள்ளது.