ஸ்டார் ட்ரெக் படங்களில் நடித்த ஆன்டன் எல்சின் விபத்தில் உயிரிழப்பு

27 வயதான ஹாலிவுட் நடிகர் ஆன்டன் எல்சின் விபத்து ஒன்றில் உயிரிழந்த செய்தியை அவருடைய ரசிகர்களும், நண்பர்களும் அதிர்ச்சியுடன் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

பாவெல் செக்கோவ் என்ற கதாபாத்திரத்தில் சமீப ஸ்டார் ட்ரெக் படங்களில் நடித்துள்ள எல்சின், லாஸ் ஏஞ்சலீஸ் பகுதியில் உள்ள அவரது வீட்டில் அவருடைய காரால் நசுக்கப்பட்டு உயிரிழந்தார்.

செங்குத்தான சாலை ஒன்றில் அந்த கார் பின் நோக்கி கீழே உருண்டு, எல்சினை செங்கல் தூண் மற்றும் வேலி ஒன்றின் மீதும் மோத செய்தது.

நிறைய திறமைகளை கொண்ட எல்சின், தாராள இதயம் கொண்டவர் என்றும், வயதுக்கு மீறிய அறிவை கொண்டிருந்தவர் ஆனால் அவரது நேரம் வருவதற்குமுன் சென்றுவிட்டார் என எல்சினின் சக நடிகரான ஸக்காரி குவின்டோ தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம், ஸ்டார் ட்ரெக் பியாண்ட் என்ற திரைப்படம் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது. இதில், எல்சின் செக்கோவ் என்ற கதாபாத்திரத்தில் மீண்டும் நடித்துள்ளார்.