ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன்: கோஷ்டிகானமா? தனி ஆவர்த்தனமா?

ஐரோப்பிய ஒன்றியத்தில் ஐக்கிய ராஜ்ஜியம் தொடர்வதா அல்லது அதிலிருந்து வெளியேறுவதா என்று வரும் வியாழனன்று (23-06-2016) பிரிட்டிஷ் வாக்காளர்கள் முடிவு செய்யவுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று இதுவரை பிரச்சாரம் செய்துவந்த பிரிட்டனின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் மூத்த அரசியல்வாதியான வார்சி தனது முடிவை மாற்றிக்கொண்டதாக திடீரென அறிவித்திருக்கிறார்.

இன்று முதல் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்வதற்காக தான் பிரச்சாரம் செய்யப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று கோருபவர்கள் அந்நியர் மீதான வெறுப்பைத் தூண்டுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதேவேளை, இந்த விஷயத்தில் இதுவரை முடிவு செய்யாதவர்களைக் கவர இருதரப்பும் கடுமையான பிரச்சாரங்களை செய்து வருகின்றன.

பிரிட்டன் அரசியலில் சூடுபறக்கும் இந்த பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பின் பின்னணியை எளிமைப்படுத்தி விளக்கும் நோக்கில் ஒரு இசைக்கச்சேரியில் சேர்ந்த இசைக்கலைஞரை உதாரணமாகக் கொண்டு பிபிசி தயாரித்திருக்கும் கருத்துப்படக் காணொளியை இங்கே காணலாம்.