அகதி முகாமுக்கு துணையின்றி வரும் குழந்தைகளின் எண்ணிக்கை உயர்வு

  • 20 ஜூன் 2016

பிரான்சின் வட மேற்கிலுள்ள 'த ஜங்கிள்' என்றறியப்படும் முகாமில், அகதிகளுக்கு உதவி வழங்கும் அறக்கொடை நிறுவனம், இந்த முகாமுக்கு துணையின்றி வரும் குழந்தைகளின் எண்ணிக்கை பெரிய அளவில் உயர்வு கண்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption கோப்பு படம்

கலே நகருக்கு வந்துள்ள 142 குழந்தைகளில், 10 குழந்தைகளைத் தவிர மற்ற அனைவரும் எந்த துணையுமின்றி வந்துள்ளனர். கடந்த மாதத்தை விட, இது 30 சதவீதத்திற்கும் மேல் அதிகம்.

முகாமிலுள்ள 700 இளைஞர்களில், 80 விழுக்காட்டினர் துணையின்றி வந்துள்ள குழந்தைகள் என்று ல போர்ஜ் தே மீக்ரன் என்ற குடியேறிகள் மற்றும் அகதிகள் உதவி அறக்கொடை நிறுவனம் தெரிவித்திருக்கிறது.