கென்யாவில் கிளர்ச்சிக்குழு தாக்குதலில் 5 அதிகாரிகள் பலி

அல் ஷபாப் இஸ்லாமியவாத கிளர்ச்சிக் குழுவால் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தாக்குதல் ஒன்றில் குறைந்தது 5 காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளதாக கென்யாவின் வடகிழக்கு பகுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை

மான்தெரா நகருக்கு சென்று கொண்டிருந்த ஒரு பயணியர் பேருந்துக்கு பாதுகாப்பாக இவர்கள் சென்று கொண்டிருந்தபோது, அவர்கள் வாகனம் தாக்குதலுக்கு இலக்கானது.

அருகிலுள்ள சோமாலியாவில் இருந்து அல் ஷபாப் குழுவினர் செயல்படுகின்றனர். ஆனால், முன்னர் மான்தெராவையும், அதைச் சுற்றிய பகுதிகளையும் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.

நான்கு அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக மான்தெரா வட்டார காவல்துறை தலைவர் ஜாப் போரொன்ஜோ பிபிசியிடம் தெரிவித்தார்.

2014 ஆம் ஆண்டு கடைசியில் மான்தெரா நகருக்கு அருகில் நடத்திய இரு தனித்தனி தாக்குதல்களில் 60-க்கு மேலானோரை அல் ஷபாப் கொன்றது குறிப்பிடத்தக்கது.