டொனால்ட் டிரம்பின் பரப்புரை மேலாளர் திடீர் விலகல்

அமெரிக்க குடியரசு கட்சியின் உத்தேச அதிபர் வேட்பாளரான டொனால்ட் டிரம்பின் பரப்புரை மேலாளர் அவருடைய பணியிலிருந்து விலகவுள்ளார்.

படத்தின் காப்புரிமை AP

உத்தேச அதிபர் வேட்பாளராக வெற்றியடையும் முயற்சி தொடங்கியதிலிருந்தே கோரெய் லிவான்டோஸ்கி, டிரம்பின் பக்கம் இருந்துள்ளார்.

லிவான்டோஸ்கியின் கடின உழைப்பிற்கும், அர்ப்பணிப்புக்கும் நன்றியுடன் இருப்பதாக பரப்புரைக்கான பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், அவர் பதவிலிருந்து செல்வதற்கான சரியான காரணம் இன்னும் தெளிவாகவில்லை.

பொதுத் தேர்தல் பரப்புரைக்கு ஏற்றதாய் டிரம்ப அவரையே நிலைமாற்றி கொள்வதற்கு இது உதவும் என்று சில அறிக்கைகள் குறிப்பிடுகின்றன,