ரியோ நகர பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த ஆஸ்திரேலிய ஒலிம்பிக் கமிட்டி கோரிக்கை

பிரேசிலின் ரியோ நகர அதிகாரிகளிடம் தங்கள் நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு பாதுகாப்பினை அதிகரிக்க வேண்டுமென ஆஸ்திரேலிய ஒலிம்பிக் கமிட்டி கேட்டுக் கொண்டுள்ளது.

படத்தின் காப்புரிமை
Image caption கிட்டி சில்லர்

ஆஸ்திரேலியாவின் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக்ஸில் கலந்துகொள்ளும் படகுப் போட்டியாளர் ஒருவரையும், வீரர்கள் குழுவின் அதிகாரி ஒருவரையும் அண்மையில் துப்பாக்கி முனையில் வழிப்பறி செய்த சம்பவம் அண்மையில் ரியோ நகரில் நடந்தது.

ஒலிம்பிக்ஸ் போட்டி ஆகஸ்ட் மாதம் துவங்கவுள்ள காலகட்டத்தில், 80000-க்கும் மேற்பட்ட போலீசாரும், பாதுகாப்பு படையினரும் ரியோ நகரில் ரோந்து பணியில் ஈடுபடவுள்ளார்கள்.

ஆனால், இந்த பாதுகாப்பு படையினர் ஒலிம்பிக் போட்டி துவங்கும் முன்பாகவே ரோந்து பணியில் அமர்த்தப்பட்ட வேண்டும் என்று ஆஸ்திரேலிய ஒலிம்பிக் அணியின் தலைவரான கிட்டி சில்லர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, பயிற்சி மற்றும் போட்டி நடக்கும் இடங்களில் தற்போதே பாதுகாப்புப் பணி துவங்கிட வேண்டும் என்று கூறியுள்ள அவர், இரண்டு ஆஸ்திரேலிய பெண்கள் மீது நடந்த தாக்குதலை ஒரு தனிப்பட்ட சம்பவமாக கருத முடியாது என்று தெரிவித்துள்ளார்.