சரியான பணி செயல்பாடு இல்லாததால், கம்பால் அடித்து பயிற்சி வழங்கிய வங்கி

சரியான பணிச் செயல்பாடு இல்லாததால், ஊழியரை பொது இடத்தில் வைத்து அடிக்கின்ற காணொளி ஒன்று இணையதளத்தில் வெளியாகிய பின்னர் இரண்டு சீன வங்கி அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Peoples Daily

ட்சாங்செ ஊரக வணிக வங்கி 200 பேருக்கு மேலான பணியாளர்களுக்கு சனிக்கிழமை பயிற்சி நடத்தியபோது இந்த காணொளி பதிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

நான்கு பெண்கள் உள்பட எட்டு பேர் மீண்டும் மீண்டும் கம்பால் பிட்டத்தில் அடிக்கப்பட்டுள்ளனர்.

தான் கையாண்ட முறைகள் அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாமல் போகலம் என்று பயிற்சியாளர் மன்னிப்பு கோரியுள்ளார்.