மேற்கு கரை பகுதியில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி, இருவர் படுகாயம்

மேற்கு கரை பகுதியின் அருகேயுள்ள பெய்ட் உர் கிராமத்தில், இஸ்ரேலிய துருப்புக்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில், ஒரு பாலத்தீனர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை
Image caption மேற்கு கரை பகுதி சாலை (கோப்பு படம்)

வாகன போக்குவரத்து மீது கல்லெறிந்த ஒரு குழுவின் மீது இஸ்ரேலிய துருப்புக்கள் துப்பாக்கி சூடு நடத்தியதாக பாலத்தீனிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை பகுதியில், ஜெருசலேம் முதல் டெல்அவிவ் நகரம் வரையிலான வழித்தடத்தில், பல கிலோமீட்டர் தூரத்துக்கு ஒரு பரபரப்பான சாலை குறுக்கே செல்கிறது.