ஜோர்டானில் கார் குண்டு தாக்குதல்: பதிலடி கொடுக்கப்படும் என மன்னர் சூளுரை

  • 21 ஜூன் 2016

சிரியாவின் அருகில் உள்ள ஜோர்டான் நாட்டின் எல்லை பகுதிக்கு அருகில், ஆறு பாதுகாப்பு படையினரை கொன்ற கார் குண்டுத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்போவதாக ஜோர்டன் நாட்டு மன்னர் அப்துல்லா சூளுரைத்துள்ளார்.

படத்தின் காப்புரிமை EPA

ஜோர்டான் இதை இரும்புக் கரம் கொண்டு பதிலடி கொடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

சிரியா நாட்டு பகுதியில், ஒரு அகதிகள் முகாமிற்கு அருகிலிருந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த குண்டு வெடிப்பிற்கு காரணமான அமைப்பு குறித்து எந்த தகவலும் தெளிவாக தெரியாத நிலையில், இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்பின் மீது சந்தேகங்கள் எழுந்துள்ளன.

ஐ.எஸ் அமைப்பிற்கு எதிரான சர்வதேச ராணுவக் கூட்டணியில் ஜோர்டான் அங்கம் வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.