ஜோர்டானிய பாதுகாப்பு பணியாளர்கள் பலர் கார் குண்டு தாக்குதலில் பலி

  • 21 ஜூன் 2016

சிரியாவின் எல்லைக்கு அருகில் நிகழ்ந்த கார் குண்டு தாக்குதலில் எல்லை பாதுகாப்பு பணியாளர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளதாக ஜோர்டானிய படை தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AP
Image caption பல்லாயிரக்கணக்கான சிரியர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் ருக்பான் அகதிகள் முகாமுக்கு வெளியே இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது

பல பாதுகாப்பு பணியாளர்கள் காயமடைந்துள்ளதாகவும் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட பல வாகனங்கள் அழிக்கப்பட்டன என்று அது தெரிவிக்கிறது, ஆனால், அது பற்றிய அதிக விபரங்களை வழங்கவில்லை.

ஜோர்டானின் தொலைதூர வட கிழக்கிலுள்ள ருக்பான் பகுதியில் பல்லாயிரக்கணக்கான சிரியா குடிமக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் ஒரு அகதிகள் முகாமுக்கு வெளியே இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.