தென் ஆப்ரிக்க தலைநகர் பிரிட்டோரியாவில் கலவரம்: பேருந்துகளுக்கு தீவைப்பு

  • 21 ஜூன் 2016

தென் ஆப்ரிக்கவில், போராட்டக்காரர்கள், தலைநகர் ப்ரிடோரியாவின் பல பகுதிகளில் பேருந்துகளுக்கு தீவைத்து சாலை மறியல்களில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்கள், உள்ளாட்சி தேர்தலுக்காக ஆளும் ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி குறித்து கோபத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரான தோகோ டிடிசாவுக்கு தனது உறுப்பினர்கள் ஆதரவளிக்க வேண்டும் என ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த வன்முறை குறித்து அரசு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும் இதை நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

தென் ஆப்ரிக்காவில், ஆகஸ்டு மாதம் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கு முன்னதாக அங்கு அரசியல் பதற்றங்கள் நிலவி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது