வெனிசுவேலா: வாக்கெடுப்புக்கு செல்லுபடியாகியுள்ள 70 ஆயிரத்திற்கு மேற்பட்ட கையெழுத்துக்கள்

வெனிசுவேலா அதிபர் நிக்கோலாஸ் மதுரோவை பதவியிலிருந்து நீக்குவது தொடர்பாக மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்துவதற்கு விண்ணப்பத்தில் கையெழுத்திட்ட 70 ஆயிரத்திற்கும் மேலானோரின் கையெழுத்துக்களைத் தேர்தல் அதிகரிகள் திங்கள்கிழமை சரிபார்த்து செல்லுபடியாகுபவை என்று அறிவித்துவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் ஹென்ரிக் காபிரிலெஸ் கூறியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை AP

இந்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடைபெறுவதற்கான வழிமுறைகள் தொடங்க ஏறக்குறைய 200 ஆயிரம் பேர் தங்களுடைய அடையாள அட்டைகளையும், கைரேகைளையும் உறுதி செய்ய வேண்டும்.

தீவிர பணவீக்கம், உணவு மற்றும் பிற அடிப்படை பொருட்களின் பற்றாகுறை ஆகியவற்றிற்கு மதுரோவின் கொள்கைகளே காரணம் என எதிர்கட்சி குற்றஞ்சாட்டுகிறது.

முதல் கட்டத்தில் போதுமான கையெழுத்துக்கள் அங்கீகரிக்கப்பட்டால், அதிபரை மீளப்பெறும் வாக்கெடுப்பு நடத்துவதற்கு 4 மில்லியன் வாக்காளர்கள் புதிய விண்ணப்பத்தில் கையெழுத்திட வேண்டியிருக்கும்.