பிரேசிலில் ஒலிம்பிக் சுடர் ஏற்றும் நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்ட சிறுத்தைப்புலி சுட்டுக் கொலை

ஒலிம்பிக் சுடர் ஏற்றும் நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்ட சிறுத்தைப்புலியை நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்ட சில தருணங்களுக்குப் பின், சுட்டுக் கொல்லும் கட்டாயம் ஏற்பட்டதாக பிரேஸில் ராணுவம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

ராணுவ செய்தி தொடர்பாளர் ஒருவர், அமேசானில் உள்ள மனாஸின் வடக்கு நகரத்திலிருந்த ஒரு உயிரியல் பூங்காவிலிருந்து, அந்த சிறுத்தைப் புலி அதன் கண்காணிப்பாளர்களிடமிருந்து தப்பிவந்து, ஒரு சிப்பாயைத் தாக்கியதாகத் தெரிவித்துள்ளார்.

நான்கு மயக்க மருந்து தடவிய ஈட்டிகளை அதன் மீது ஏவியும், அதைத் தடுக்க முடியவில்லை.

ரியோ ஒலிம்பிக்ஸின் ஒருங்கிணைப்புக் குழு, சங்கிலியால் பிணைக்கப்பட்ட ஒரு வன விலங்கின் அருகே , அமைதி மற்றும் ஒற்றுமையின் சின்னமாக விவரிக்கப்படும் ஒலிம்பிக் சுடர் ஏற்றும் நிகழ்வை அனுமதித்தது தவறு என தெரிவித்துள்ளது.

விலங்குகள் நல ஆர்வலர்கள் சிறுத்தைப்புலியை கொன்றதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.