சுறாக்களின் துடுப்புகளை இனி எடுத்துச் செல்லப் போவதில்லை: கெத்தே பசிஃபிக் விமான நிறுவனம்

ஹாங்காங்கின் கெத்தே பசிஃபிக் விமான நிறுவனம், சீன வகை உணவுகளில் முக்கிய ருசிகர உணவாக இருக்கும் சுறாக்களின் துடுப்புகளை இனி எடுத்துச் செல்லப்போவதில்லை என அறிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை GETTY IMAGES

உலகின் மிகப்பெரிய சரக்கு விமான சேவைகளில் ஒன்றான கெத்தேவின் இந்த முடிவு, சுறா துடுப்பு வணிகத்தில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இந்த விமான நிறுவனம், நிலைத்து நீடிக்கக்கூடிய அளவில் பெறப்படும் சுறாக்களின் துடுப்புகளை மட்டுமே எடுத்துச் செல்லும் என தெரிவித்திருந்தது.

உலகில், அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினமான சுறாக்களின் எண்ணிக்கையை பாதுகாக்கும் முயற்சியில்,

சுறாவின் துடுப்புகளை ஏற்றுமதி செய்வதைத் தடை செய்துள்ள குறைந்தது 30 விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்து நிறுவனங்களுடன் இந்நிறுவனத்தையும் சேர்க்க வலியுறுத்தி, ஹாங்காங்கில் உள்ள பாதுகாப்பு குழுக்கள் கெத்தே பசிஃபிற்கு எதிராக பிரசாரங்களை தொடங்கிய போது இந்த கொள்கை மாற்றம் ஏற்பட்டது.