ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன்: தெற்காசிய வாக்குகள் எந்த பக்கம்?

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன்: தெற்காசிய வாக்குகள் எந்த பக்கம்?

ஐரோப்பிய ஒன்றியத்தில் ஐக்கிய ராஜ்ஜியம் தொடர்ந்து நீடித்திருப்பதா அல்லது அதிலிருந்து விலகுவதா என்பது குறித்து முடிவெடுப்பதற்காக பிரிட்டனில் நாளை வியாழக்கிழமை (23-06-2016) நடக்கவுள்ள மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்புக்கான இறுதிப் பிரச்சாரம் இன்றோடு (22-06-2016) நிறைவடைகிறது.

பிரிட்டனில் சுமார் 14.5 லட்சம் இந்திய வம்சாவளியினரும், 11.7 லட்சம் பாகிஸ்தானிய வம்சாவளியினரும் வாழ்கிறார்கள்.

ஐக்கிய ராஜ்ஜ்ஜியத்தின் இரண்டு பெரிய சிறுபான்மை சமூகங்களாக இவை கணிக்கப்படுகின்றன.

பிரிட்டிஷ் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த கருத்தறியும் வாக்கெடுப்பு குறித்து இந்திய மற்றும் பாகிஸ்தானிய வம்சாவளியினரின் கருத்துக்கள் எப்படி இருக்கின்றன?

பிபிசியின் பிரத்யேக செய்தித் தொகுப்பு.