வேட்பாளர் வயது வரம்பினை குறைக்க கோரிய விண்ணப்பத்தை ஹாங்காங் உயர்நீதிமன்றம் நிராகரிப்பு

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வயது வரம்பினை குறைக்கக் கோரி மாணவர் ஆர்வலர் ஒருவரின் விண்ணப்பத்தை ஹாங்காங் உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

படத்தின் காப்புரிமை BBC Chinese
Image caption ஜோஸுவா வோங்

சட்டபூர்வமாக ஹாங்காங் குடிமக்கள் வாக்களிக்கும் வயதினை 21-லிருந்து, 18 வயதாக குறைக்க வேண்டும் என்று ஜோஷுவா வெங் கோரினார்.

கடந்த 2014-இல் ஹாங்காங்கின் நகர மையத்தை பல மாதங்களாக மூட வைத்த ''குடை இயக்கம்'' என்ற நீண்ட ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்ட இயக்கத்தில் ஜோஷுவாவும் ஒரு தலைவராக இருந்தார்.

19 வயதாகும் ஜோஷுவா, டெமோசிஸ்டோ என்ற அரசியல் கட்சியின் தலைவராக செயல்படுகிறார். இந்த ஆண்டு இறுதியில் நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில் அக்கட்சி, தனது வேட்பாளர்களை நிறுத்த உள்ளது.