பிரபல பாகிஸ்தான் சுஃபி பாடகர் சுட்டுக் கொலை

  • 22 ஜூன் 2016

பாகிஸ்தானின் சிறந்த பாடகர்களில் ஒருவராக அறியப்பட்ட அம்ஜத் சப்ரி, நாட்டின் தெற்கு நகரமான கராச்சியில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Amjad Sabri
Image caption அம்ஜத் சப்ரி

கவ்வாலி எனப்படும் சுஃபி பக்தி பாடல்கள் பாடுவதில் புகழ் பெற்ற அம்ஜத் சப்ரி, தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள பரபரப்பான பகுதியில் காரில் பயணித்து கொண்டிருக்கும் போது, மிக அருகாமையிலிருந்து துப்பாக்கி ஏந்திய இருவரால் சுடப்பட்டுள்ளார்.

மருத்துவமனை செல்லும் வழியில், அவர் உயிரிழந்துள்ளார்.

சுஃபியிஸத்துடன் தொடர்புடைய இசையினை மத நிந்தனை செய்யும் இசையாக சுன்னி தீவிரவாதிகள் கருதி வருகின்றனர்.

கடந்த சில வருடங்களாக, பாகிஸ்தானில் உள்ள சில சுஃபி வழிபாட்டு தலங்களை தற்கொலைப்படை குண்டுதாரிகள் இலக்காக கொண்டு தாக்குதல் நடத்துகின்றனர்.