சர்வதேச தீவிரவாதத்தை சமாளிப்பதில் ரஷ்யாவை பின்பற்றாத மேற்குலகம்: புடின் குற்றச்சாட்டு

சர்வதேச தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதில் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க ரஷ்யாவுடன் சேர மேற்கத்திய நாடுகள் தவறி விட்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குற்றம்சாட்டியுள்ளார்.

படத்தின் காப்புரிமை AP

இரண்டாம் உலகின் போருக்கு முன்பாக, நாஜி அச்சுறுத்தலுக்கு எதிராகக் கூட்டு நடவடிக்கை எடுக்க சோவியத் விடுத்த அறைகூவலை சில நாடுகள் செவிமடுக்கத் தவறியது போன்ற அதே தவறினை தற்போதும் மேற்கத்திய உலகம் செய்துள்ளதாக ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான டூமாவில் உரையாற்றிய புடின் கூறியுள்ளார்.

மாறாக, ரஷ்யாவின் எல்லைகளுக்கு அருகே தனது ஆக்ரோஷமான நடவடிக்கைகளை நேட்டோ அமைப்பு தற்போது அதிகரித்து வருவதாக புடின் மேலும் கூறியுள்ளார்.