ஐநா பொது சபையின் முன்னாள் தலைவர் ஜான் ஆஷ் மரணம்

அமெரிக்காவில், தன் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்களை சந்தித்து வந்த ஐ.நா பொது சபையின் முன்னாள் தலைவரான ஜான் ஆஷ் உயிரிழந்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AP
Image caption ஜான் ஆஷ்

61 வயதாகும் ஜான் ஆஷ், ஆண்டிகுவா மற்றும் பார்புடாவின் ஐநா தூதராக பணியாற்றியுள்ளார்.

ஜான் ஆஷ் மாரடைப்பினால் பாதிக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் 2014 வரை, ஓராண்டுக்கு ஐநா பொது சபையின் தலைவராக ஜான் ஆஷ் செயல்பட்டார்.

சீன வர்த்தகர்களிடமிருந்து 1.3 மில்லியன் டாலர் லஞ்சம் பெற்றதாகவும், சீன வர்த்தகர்களின் நலன்களை முன்னெடுக்க தனது பதவியை பயன்படுத்தியதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அக்டோபரில் ஒரு சிறப்பு நீதிமன்றத்தால், ஜான் ஆஷின் கண்டனத்துக்குள்ளானார்.