போர் நிறுத்தம்: கொலம்பிய அரசு - ஃபார்க் கிளர்ச்சியாளர்களிடையே உடன்பாடு

  • 23 ஜூன் 2016

அரை நூற்றாண்டாக நடைபெற்று வரும் உள்நாட்டு மோதலை முடிவுக்குக் கொண்டுவர கூட்டுப் போர் நிறுத்தத்துக்கு கொலம்பிய அரசும் ஃபார்க் கிளர்ச்சியாளர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP

இதுதொடர்பான விவரங்கள் வியாழக்கிழமை வெளியிடப்படும்.

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற மோதல்களால், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டார்கள். 70 லட்சம் பேர் இடம் பெயர்ந்திருக்கிறார்கள்.

இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாட்டை அடுத்து, இறுதி அமைதி ஒப்பந்தம் அடுத்த மாதம் கையெழுத்தாகும் என்று கொலம்பிய அதிபர் யவான் மானுவெல் சாண்டோஸ் தெரிவித்தார்.