ஜேர்மனிய திரையரங்கில் சுட்ட துப்பாக்கிதாரி சுட்டுக்கொலை

மேற்கு ஜேர்மனியில் ஒரு சினிமா திரையரங்கில் துப்பாக்கி பிரயோகம் செய்த நபரை தாம் சுட்டுக் கொன்றுவிட்டதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty
Image caption ஜேர்மனிய திரையரங்கில் துப்பாக்கிதாரியை சுற்றிவளைத்த போலிஸார்

பிராங்பர்ட்டுக்கு அருகே கினோபோலிஸ் வளாகத்தில் அந்த நபர் ஒரு வேட்டையாவது சுட்டதாக ஜேர்மனிய ஊடகங்கள் கூறின.

20 பேராவது காயமடைந்ததாக முன்னர் கூறப்பட்டதை போலிஸார் மறுத்துள்ளனர்.

அந்த நபர் ஆட்களை பணயமாக பிடித்து வைத்திருந்ததாக நம்பிய போலிஸார் அங்கு வேகமாக நுழைந்ததாக உள்துறை அமைச்சின் பிராந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.