ஆள் கடத்தலில் ஈடுபடும் முக்கிய நபர்களை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் இன்டர்போல்

  • 23 ஜூன் 2016
படத்தின் காப்புரிமை AFP

பெரிய சர்வதேச நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆள் கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என சர்வதேச போலிஸ் அமைப்பான இன்டர்போல் தெரிவித்துள்ளது.

அவர்களை கண்டுபிடிக்க உதவுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான பொதுமக்களை எல்லைகளுக்கு அப்பால் கடத்தி பெரும் லாபம் ஈட்டியதாக சொல்லப்படும் 26 முக்கிய சந்தேக நபர்களை இன்டர்போல் கைது செய்துள்ளது.

இதில், பிரான்ஸிலிருந்து பிரிட்டனுக்கு சின்ன படகுகள் மூலம் மக்களை கடத்திய அல்பேனிய கூட்டத்தினரும் அடங்குவார்கள்.

கடந்தாண்டு பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் முக்கியமாக சிரியாவிலிருந்து ஐரோப்பாவை அடைந்துள்ளதை இன்டர்போல் கண்டுள்ளது.

ஐரோப்பாவில் மிக தீவிரமாக நடைபெற்று வரும் குடியேறிகள் நெருக்கடியை இன்டர்போலின் உலகளாவிய நடவடிக்கைகள் மூலம் பதிலளித்துள்ளது.

ஐரோப்பாவில் கடந்த ஆண்டு பெருமளவிலான குடியேறிகள் பிரச்சனை ஏற்பட்டது. சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஐரோப்பிய நாடுகளுக்கு வந்தார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள்

சிரியாவிலிருந்து வந்தவர்கள். இந்த நிலையில், இன்டர்போல் சர்வதேச அளவிலான இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது.