கென்யாவில் அமைந்துள்ள புதிய அரசால் தொண்டு நிறுவனங்களுக்கு சிக்கல்

  • 23 ஜூன் 2016
படத்தின் காப்புரிமை Getty

தங்கள் நிறுவனங்களில் வெளிநாட்டவர்களை நியமிப்பது தொடர்பாக புதிய அரசு விதித்துள்ள சில கட்டுப்பாடுகளால் தங்கள் பணி பாதிப்படையக்கூடும் என்று கென்யாவில் உள்ள தொண்டு நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

தகுதி வாய்ந்த கென்யர்கள் இருக்கும் போது, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கென்யாவில் தங்கி இருக்கும் வெளிநாட்டவர்களை பணி நியமிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது எனக்கூறி இந்த வாரத்தின் தொடக்கத்தில் சட்ட விதிகள் அமலுக்கு வந்தன.

ஏற்கனவே, வெளிநாட்டு பணியாளர்கள் பலருடைய பணி ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்படாமல் உள்ளன.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் உள்ள முரண்பாடுகளை இந்த புதிய விதிகள் களைய முயற்சிக்கின்றன.

கென்யாவில் அரசு சாரா நிறுவனங்களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான வெளிநாட்டினர் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.