நைஜீரிய முகாமில் ஒரே மாதத்தில் 200 பேர் மரணம்

போகோ ஹரம் என்ற இஸ்லாமிய தீவிரவாதக் குழுவை விட்டு வெளியேறிய சுமார் 200 பேர், வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள தாற்காலிக முகாம்களில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பட்டினி மற்றும் வயிற்றுப் போக்கு காரணமாக உயிரிழந்திருக்கிறார்கள்.

படத்தின் காப்புரிமை AFP

மருத்துவ சேவை தன்னார்வ அமைப்பான எம்.எஸ்.எஃப் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.

பமா நகரில் உள்ள முகாம்களில், பேரழிவை ஏற்படுத்தக்கூடிய மனித அவலம் அரங்கேறிக் கொண்டிருப்பதாக எம்.எஸ்.எஃப் கூறுகிறது.

அந்த முகாம்களில் உள்ள பலர், மனதளவில் மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தாங்கள் பரிசோதித்த குழந்தைகளில் ஐந்தில் ஒருவர், சத்தான உணவு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்

எம்.எஸ்.எஃப் தெரிவித்துள்ளது.

போகோ ஹரம் மற்றும் நைஜீரிய அரசப் படைகளுக்கு இடையே நடைபெறும் மோதல்கள் காரணமாக, 20 லட்சம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியிருப்பதாக ஐ.நா. மன்றம் மதிப்பிட்டுள்ளது.