கருத்தறியும் வாக்கெடுப்புகள் - ஒரு சுருக்கமான வரலாறு

பாலியல் தொழில், மாஃபியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் பிரிட்டனின் உறுப்புரிமை ஆகியவற்றுக்கு இடையே பொதுவான அம்சம் என்ன? இவையனைத்துமே மக்கள் வாக்கெடுப்புக்கு விடப்பட்டுள்ளன.

Image caption கோப்பு படம் (பிபிசி)

பிரிட்டனின் அரசை பிளவுபடுத்தி, உலகெங்கும் தலைப்புச் செய்தியாக உருவாக்கிய ஒரு பரப்புரைக்கு பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் பிரிட்டன் உறுப்பினராக இருக்க வேண்டுமா என்ற வினா பிரிட்டிஷ் குடிமக்களிடம் இன்று கேட்கப்படவுள்ளது.

படத்தின் காப்புரிமை
Image caption பிரிட்டனில் இன்று நடக்கவுள்ள வாக்கெடுப்புக்கு தயார் ஏற்பாடுகள்

ஆனால், பல வகையான வாக்கெடுப்புகள் கடந்த காலங்களில் நடந்துள்ளன. ஒரு புதிய புரட்சிகர அரசியலமைப்பின் மீது 1793-ல் பிரான்ஸ் வாக்களித்த போதிலிருந்து, தற்போது வரை ஏறக்குறைய 3000 தேசிய அளவிலான வாக்கெடுப்புகள் உலகமெங்கும் நடந்துள்ளன. தேசிய மற்றும் உள்ளூர் பிரச்சினைகள் குறித்து பல வாக்கெடுப்புகள் நடந்துள்ளன.

1970-லிருந்து வாக்கெடுப்புகளின் எண்ணிக்கை அதிக அளவில் அதிகரித்தது. இந்த எண்ணிக்கை 1990-களில் மிகவும் உச்சத்தைத் தொட்டது. மாஃபியா உறுப்பினர்களை வீட்டுக் காவலில் வைப்பது குறித்த வாக்கெடுப்பு உள்பட 1995-ஆம் ஆண்டில் மட்டும், இத்தாலி 12 பகுதி வாக்கெடுப்புக்களை நடத்தியது.

படத்தின் காப்புரிமை
Image caption இத்தாலியில் மாஃபியா உறுப்பினர்களை வீட்டுக் காவலில் வைப்பது குறித்து வாக்கெடுப்பு

1997-ஆம் ஆண்டு ஈக்வடோர் நாடு 14 பகுதி வாக்கெடுப்புகளை நடத்தியது. இதில் அதிபரை அவரது பதவியிலுருந்து நீக்குவது தொடர்பான வாக்கெடுப்பும் அடங்கும்.

எரிவாயு பணிகளை தேசிய மயமாக்குவதிலுருந்து புதிய வாக்களிப்பு முறையினை அமைப்பது வரை எந்த அம்சம் குறித்தும் மக்கள் பதிவு செய்யும் வாக்கு, வாக்கெடுப்பாக அமையலாம்.

கடந்த 2009-ஆம் ஆண்டு, மசூதியின் கோபுர அமைப்புக்கள் கட்டுதலை தடுக்க சுவிஸர்லாந்து வாக்களித்தது. 2012-இல் அந்நாட்டின் மிகப் பெரிய நகரமான ஜுரிக், கார்களில் பாலியல் தொழில் நடக்க அனுமதிக்க ''உடலுறவு பெட்டிகள்'' வசதியினை கொண்டு வருவதற்கு ஆதரவாக வாக்களித்தது.

உலகில், அரசுக்கு சட்டங்களை மக்களே பரிந்துரை செய்யவும், சட்டங்கள் கடுமையாக வலியுறுத்தப்பட்டால் அவற்றின் மீது நேரடியாக வாக்களிக்கவும் வழிவகை செய்யும் ஒரே நாடு சுவிஸர்லாந்து மட்டுமேயாகும்.

சுதந்திரம்:

சில மக்கள் வாக்கெடுப்புகளின் வினோத தன்மையையும் தாண்டி, தனி நாடாக வேண்டும் அல்லது ஒரு அமைப்பிலிருந்து ஒரு நாடு வெளியேறுவது போன்ற அம்சங்களின் மீது ஒரு வாக்கெடுப்பு நடத்தப்படும் போது, அது பலரின் கவனத்தையும் ஈர்க்கிறது.

1945-ஆம் ஆண்டிலிருந்து, சுதந்திரம் கோரும் 50-க்கும் மேற்பட்ட வாக்கெடுப்புகள் நடந்துள்ளன. இவற்றில் 27 வாக்கெடுப்புகள் சுதந்திரம் வேண்டுமா என்பதற்கு. ''ஆம்'' என்றும், 25 வாக்கெடுப்புகள் ''இல்லை'' என்றும் வாக்களித்துள்ளன.

ஆனால், ''ஆம்'' என்று வாக்களித்த நாடுகளில் மோசமான ஜனநாயகமே இருந்துள்ளதாக பதிவுகள் தெரிவிக்கின்றன.

1990களில் 14 நாடுகள் சுதந்திரம் கோரி வாக்களித்தன.

சோவியத் யூனியன் உடைந்த போது, அவற்றில் 8 நாடுகள் அதிலிருந்து பிரிந்தன.

முன்னாள் யூகோஸ்லாவியாவிலிருந்து 3 நாடுகள் பிரிந்தன, எத்தோப்பியாவிலிருந்து ஒரு நாடு பிரிந்தது. மேலும் சுதந்திரம் கோரி பிரிந்த ஒரு நாடு தற்போதுள்ள கிழக்கு திமோர் ஆகும். இதன் முடிவினை அங்குள்ள கொடூரமான போராளிக் குழு எதிர்த்தது.

படத்தின் காப்புரிமை
Image caption 2014-இல் யுக்ரேனில் நடந்த வாக்கெடுப்பு

பெரும்பாலான கருத்தறியும் வாக்கெடுப்புகள் புதிய மற்றும் அதிக வெளிப்படையான சகாப்தத்தின் தொடக்கத்தை சுட்டிக்காட்டியுள்ளன.

ஆனால், சுதந்திரம் கோரும் வாக்கெடுப்புகள் திரும்ப நிலையை எட்ட முடியாத ஒரு வழிமுறையினை தொடக்கி விடுவதாக சிலர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

1967இல் இருந்து அமெரிக்காவிடமிருந்து சுதந்திரம் வேண்டுமா என்று நான்கு வாக்கெடுப்புகளை ப்யுயர்ட்டோ ரிக்கோ நடத்தியது. இவையனைத்துக்குமே ''இல்லை'' என்ற பதிலே வாக்களிக்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை
Image caption அமெரிக்காவிடமிருந்து சுதந்திரம் வேண்டி பெர்டோ ரிக்கோ மக்கள் பரப்புரை

அதே வேளையில், கனடாவை விட்டு வெளியேறுவதற்கு எதிராக இரண்டு முறை கியூபெக் வாக்களித்தது. ஆன போதிலும், அங்கு இன்னொரு வாக்கெடுப்பு வேண்டி நடக்கும் பரப்புரைகள் பலமாக உள்ளன.