அண்டார்டிக்கிலிருந்து நோய்வாய்ப்பட்ட இரு ஊழியர்கள் சிலிக்கு கொண்டு வரப்பட்டனர்

  • 23 ஜூன் 2016
படத்தின் காப்புரிமை AP

தென் துருவ ஆராய்ச்சி மையத்திலிருந்து நோய்வாய்ப்பட்ட இரு பணியாளர்களை சுமந்து வந்த இலகு ரக விமானம் ஒன்று தெற்கு சிலியில் பத்திரமாக தரையிறங்கி உள்ளது.

அண்டார்டிக்கின் மத்திய குளிர்கால தட்ப வெப்ப நிலையை தாக்குப்பிடிக்கும் திறனைக் கொண்ட ஒரே விமானம் ட்வின் ஓட்டர் விமானம்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption ட்வின் ஓட்டர் விமானம்

கடந்த செவ்வாய் அன்று, தென் துருவத்தில் உள்ள அமெரிக்க ஆராய்ச்சி நிலையத்தின் மீட்பு குழுவை சேர்ந்த இருவர் நோய்வாய்ப்பட்டனர். அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க ட்வின் ஓட்டர் விமானம் உதவிக்கு அழைக்கப்பட்டது.

இந்த இரு பணியாளர்களும் சிலியில் உள்ள புன்டா ஏரினாஸ் என்ற நகரத்துக்கு மாற்றப்படுவதற்குமுன், அன்டார்டிகாவின் விளிம்பு பகுதியில் உள்ள பிரிட்டிஷ் தளத்திற்கு முதலில் கொண்டு செல்லப்பட்டனர்.

பிரிட்டிஷ் தளம் இந்த பணியாளர்கள் இருந்த இடத்திலிருந்து சுமார் 2,000 கிலோ மீட்டருக்கும் மேலான் தொலைவில் உள்ளது.