பிரிட்டன் வாக்கு முடிவுக்குப் பின்னர் - படங்களில்

ஐக்கிய ராஜ்யம் ஐரோப்பியன் ஒன்றியத்தில் இருந்து விலக வாக்களித்துள்ளது. இது பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரனை தனது பதவியில் இருந்து விலக அறிவிப்பதற்கு தூண்டியது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்களிப்பிற்கு பிந்தைய தருணங்களின் தொகுப்பு.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் 71.8சதவீத வாக்குகள் பதிவாகின. அதில் 30 மில்லியன் மக்கள் வாக்களித்தனர். இது 1992க்கு ஐக்கிய ராஜ்யத்தில் பதிவான அதிகபட்ச வாக்கு பதிவு ஆகும்.
படத்தின் காப்புரிமை PA
Image caption பிரிட்டன் நேரப்படி சரியான காலை 6 மணிக்கு ஐக்கிய ராஜ்யம் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வாக்களித்தது என்று உறுதியாகியது.
படத்தின் காப்புரிமை Getty
Image caption டேவிட் கேமரன், பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான, 10 டௌனிங் வீதியில் நின்று தான் பிரிட்டிஷ் மக்களின் விருப்பத்தை மதிப்பதாகவும், தான் பிரதமர் பதவியில் இருந்து அக்டோபர் மாதம் விலகவுள்ளதாகவும் தெரிவித்தார். தனது இடத்தில் ஒரு புதிய பிரதமர் அக்டோபர் மாதம் நடக்கவுள்ள கன்சர்வேடிவ் கட்சியின் கூட்டத்தின் தொடக்கத்தில் இருப்பார் என்றார்.
படத்தின் காப்புரிமை Reuters
Image caption ஐக்கிய ராஜ்ய சுதந்திர கட்சியின் தலைவர் நைஜல் பராஜ் இன்று ஐக்கிய ராஜ்யத்தின் ''சுதந்திர நாள்'' என்று ஆர்ப்பரித்தார்.
படத்தின் காப்புரிமை Reuters
Image caption பிரெக்ஸிட் முடிவுகளுக்கு பிறகு, லண்டன் பங்குச் சந்தை கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது.
படத்தின் காப்புரிமை Reuters
Image caption கேமரனின் பதவி விலகல் அறிவிப்பை அடுத்து, எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் தலைவர் ஜெரமி கார்பின், பிரதமர் கேமரன், ஒரு பாலுறவுக்காரர்கள் திருமண உரிமை உட்பட பல முற்போக்கான சமூக நடவடிக்கைகளை எடுத்தத்ற்காக அவரை பாராட்டினார்.
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கான்சர்வேடிவ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான போரிஸ் ஜான்சன் கேமரனுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்தார்.
படத்தின் காப்புரிமை AP
Image caption முன்னதாக, ஒரு பெரிய கூட்டம் ஜான்சனின் வீட்டிற்கு முன்பு கூடியிருந்தது. பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்வி கேட்க முயன்றனர்.
படத்தின் காப்புரிமை AFP
Image caption ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்டு டஸ்க் ஐரோப்பிய நாடாளுமன்ற தலைவர் மார்ட்டின் சூல்ஸ், ஐரோப்பியன் யூனியன் கவுன்சில் தலைவர் மார்க் ருட்டே மற்றும் ஆணையத்தின் தலைவர் ஜீன் கிலாடு ஜங்கர் கூட்டு அறிக்கையை வெளியிட்டார்கள். அதில்: ''நாங்கள் ஐக்கிய ராஜ்ய அரசு அதன் மக்களின் முடிவிற்கு விரைவாக செயல் பட வைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அந்த நிகழ்வு எவ்வளவு வலியானதாக இருந்தாலும் கூட. எந்த வித தாமதமும் இந்த நிச்சயமற்ற நிலையை காலம் தாழ்த்துவதாக இருக்கும்" என்றனர்.
படத்தின் காப்புரிமை Reuters
Image caption ஸ்காட்டிஷ் முதல் அமைச்சர் நிகோலா ஸ்டர்ஜன் தான் ஸ்காட்லாந்த் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பது பற்றி ''முற்றிலும் தீர்மானமாக'' இருந்ததாகவும், தற்போது இரண்டாவதாக ஸ்காட்லாந்து சுதந்திரம் பற்றி மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடப்பதற்கு சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது என்றார்