பிரிட்டிஷ் வாக்கெடுப்பு: 52 சதவீதம் விலக ஆதரவு

  • 24 ஜூன் 2016

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டுமா என்ற கருத்தறியும் வாக்கெடுப்பில் பெரும்பான்மையினர் "வெளியேற வேண்டும்" என்று வாக்களித்துள்ளனர்.

ஏறக்குறைய 52 சதவீத வாக்காளர்கள் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பில் , விலகுவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

வெளியுறவுச் செயலர் பிலிப் ஹேமண்ட் வாக்காளர்கள் தெளிவாகத் தீர்ப்பளித்துள்ளனர் என்று கூறியிருக்கிறார்.

பிரதமர் டேவிட் கேமரன் அவரது பதவியில் நீடிக்கிறார் என்று கூறிய பிலிப் ஹேமண்ட், பிரிட்டிஷ் மக்களின் ஆணையை அவர் செயல்படுத்துவார் என்று கூறினார்.

பிரதமர் கேமரன் இன்னும் சிறிது நேரத்தில் நாட்டுக்கு உரை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.