பிரிட்டன் விலக வேண்டும் என்ற கருத்தை நான் ஆதரிக்கவில்லை: புதின் மறுப்பு

  • 24 ஜூன் 2016
படத்தின் காப்புரிமை RIA Novosti

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் விலக வேண்டும் என்ற கருத்தை தான் ஆதரித்ததாக சொல்லப்படுவதை ரஷியா அதிபர் விளாடிமிர் புதின் மறுத்துள்ளார்.

குடியேற்றம் மற்றும் பாதுகாப்பு காரணங்கள் குறித்து பிரிட்டன் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்றும் , ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிகார வர்க்கம் மீதுள்ள அதிருப்திகளையும் இந்த முடிவு பிரதிபலிப்பதாக உஸ்பெகிஸ்தானுக்கு வந்திருந்த போது புதின் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற்றம், ரஷ்யா மட்டுமின்றி உலக நாடுகள் மீதும் நேர்மறை மற்றும் எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும், ஆனால் இந்த நிலைமை எதிர்காலத்தில் சுயமாக சீர்படுத்திக் கொள்ளும் என்றும் கூறியுள்ளார்.