பிரிட்டன் நிதி நிலைமையில் பாதிப்புக்கள் பற்றி தொடர் எச்சரிக்கைகள்

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு விலகுகின்ற முடிவானது, பிரிட்டிஷ் நிதி நிலைமையில் ஏற்படுத்தும் பாதிப்புக்கள், தொடர்ச்சியான பல எச்சரிக்கைகளில் சுட்டி காட்டப்பட்டு வருகின்றன.

வளர்ச்சி மற்றும் பொது நிதிகளில் ஏற்படும் பாதிப்புகள் காரணமாக, பிரிட்டனின் தற்போதைய A-A 1 தர மதிப்பீட்டை, கடன் மதிப்பீட்டு முகமையான மூடிஸ் நிறுவனம் ஒரு எதிர்மறை கண்ணோட்டத்தில் வைத்திருக்கிறது.

லண்டன் மிக நீண்ட ஸ்திரமற்ற காலத்தை எதிர்நோக்கியிருக்கிறது என்று அது கூறியுள்ளது.

படத்தின் காப்புரிமை EPA

உள்நாட்டு சந்தைகளை பிரிட்டன் இனி வரையறுக்கப்பட்ட அளவில் தான் அணுக முடியும் என்பதால் சில நிதி நிறுவனங்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இருக்கின்ற போட்டி மிக்க நகரங்களுக்கு செல்வதை தெரிவு செய்யலாம் என்று யூரோ நாயணத்தை பயன்படுத்தும் நாடுகள் குழுவின் தலைவர் ஜேரோயன் திசெல்புளும் குறிப்பிட்டிருக்கிறார்.

பிரிட்டன் பொருளாதா மந்தநிலை அடைவதற்கும் ஒரு வாய்ப்பு இருப்பதாக முன்னணி பொருளியலாளர்கள் தெரிவித்திருக்கும் வேளையில், சில முதலீட்டாளர்கள் பிரிட்டன் வெளியேறி இருப்பதை ஒரு வாய்ப்பாகவும் பார்க்கிறார்கள் என்று பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவிக்கிறார்.