தைவானோடு மேற்கொள்ளப்படும் முக்கிய தகவல் தொடர்பை இடைநிறுத்தியது சீனா

தைவான் அரசோடு மேற்கொள்ளப்படும் தகவல் தொடர்பு வழிமுறைகளில் முக்கியமான ஒன்றை சீன அரசு இடைநிறுத்தியுள்ளது.

படத்தின் காப்புரிமை EPA

ஒரே சீனா என்ற கருத்தை ஒப்புக்கொள்ள சீனா கொடுத்த அழுத்தத்தை தைவான் அதிபர் சாய் இங்வென் மறுத்த பிறகு இந்த முடிவு வந்துள்ளது.

சீனாவுக்கும், தைவானுக்கும் இடையே இருக்கும் தற்போதைய நிலையை ஆதரிப்பதாவும், அமைதியை நிலவ செய்ய உறுதியுடன் இருப்பதாகவும் கடந்த மே மாதத்தில் பதவியேற்ற அதிபர் சாய் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty

என்றாலும், தைவானின் புதிய அதிபர் போகப் போக அதன் முறையான விடுதலையை நிறுவ முயல்வார் என்று சீன ஆட்சியாளர்கள் சிலரால் கருதப்படுகிறது.