ஐரோப்பிய ஒன்றியத்தை நிறுவிய ஆறு நாடுகள் பெர்லினில் கூட்டம்

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வாக்களித்திருக்கும் நிலைமையில், ஐரோப்பிய ஒன்றியத்தை நிறுவிய ஆறு நாடுகள், கூடிய சீக்கிரம் பெர்லினில் கூட்டம் நடத்தயிருக்கின்றன.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஜீன் கிளாடு யுன்கரும், டேவிட் கேமரனும் வேவ்வேறு திசைகளை நோக்கி பயணம்

ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம், லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்தின் வெளியுறவு அமைச்சர்கள் ஒன்றுகூடி, பிரிட்டன் வெளியேறுகின்ற வழிமுறை மற்றும் விரைவாக விலகுவது பற்றி விவாதிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பிரிட்டன் பிரதமர் பதவி ஏற்பதற்காக காத்திராமல் பேச்சுவார்த்தைகளை வெகுவிரைவில் தொடங்க விரும்புவதாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜீன் கிளாடு யுன்கர் தெரிவித்திருக்கிறார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள தேசியவாத மற்றும் ஜனரஞ்சகக் கட்சிகள், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை வரவேற்றுள்ளன.

இந்நிலைமையில், பிரிட்டனின் இந்த மாதிரியை பிற நாடுகள் பின்பற்றாமல் தடுப்பது எவ்வாறு என்பதை இந்த அமைச்சர்கள் கருத்தில் கொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.