ஸ்திரமின்மையை தணிக்க அமெரி்க்காவும், பிரிட்டனும் இணைந்து செயல்படும் - ஒபாமா

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதால் ஏற்படும் விளைவுகளை, மிகவும் குறைவான நிதி ஸ்திரமின்மையாக குறைப்பதை உறுதி செய்ய அமெரிக்காவும், பிரிட்டனும் இணைந்து பணியாற்றும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை AP

பிரிட்டனும், ஐரோப்பிய ஒன்றியமும் இன்றியமையாத கூட்டாளிகள் என்பதை மீண்டும் உறுதி செய்வதாக பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரனையும், ஜெர்மன் அதிபர் ஏங்கலா மெர்கலையும் அழைத்து ஒபாமா பேசியுள்ளார்.

படத்தின் காப்புரிமை PA

எனினும், எதிர்கால வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் பிரிட்டன் பின்வரிசைக்குத் தள்ளப்படும் என்று ஏற்கெனவே ஒபாமா தெரிவித்த கருத்தில் மாற்றமில்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்திருக்கிறது.

வாக்கெடுப்பை தொடர்ந்து டாலரை புழக்கத்திற்கு விட தயாராக இருப்பதாக கூறி அமெரிக்க பெடரல் ரிசர்வ் நிதி சந்தைகளை அமைதிப்படுத்த முயன்று வருகிறது.