சிரியாவில் தீவிர வான்வழி தாக்குதல்களில் ரஷ்ய விமானங்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்

  • 25 ஜூன் 2016

சிரியாவில், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ரஷ்ய போர் விமானங்கள் இரவில் தீவிர வான்வழி தாக்குதல்களை நடந்தியதாக சிரியாவின் அலெப்போ நகரில் இருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வான் வழி தாக்குதலானது மீதமுள்ள வழியான பிளவுபட்ட நகரத்தின் கிழக்கு பகுதியை இலக்கு வைத்து நடத்தபட்டது.

முன்பு சிரியாவின் பொருளாதார முனையமாக இருந்த இடத்தை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தாக்குதல் தொடுக்கும் சமீபத்திய அரசை ரஷ்யாவின் விமானப்படை ஆதரிக்கிறது.

லெபனான் தீவிரவாத குழுவான ஹெஸ்பொல்லா, அரச படைகளோடு மோத மேலும் பல வீரர்களை அனுப்பவுள்ளதாக தெரிவித்துள்ளது.

வெள்ளியன்று அந்த அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா, அலெப்போவில் பின்வாங்குவது ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறியுள்ளார்.