மேற்கு வெர்ஜீனியாவில் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக கண்டிராத கனமழை

அமெரிக்காவின் மேற்கு வெர்ஜீனியாவில் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக கண்டிராத மிக மோசமான வெள்ளப்பெருக்கால் 20 பேர் பலியாகியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை AP
Image caption அமெரிக்காவின் மேற்கு வெர்ஜீனியாவில் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக கண்டிராத கனமழை

ஒரே நாளில் 25 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்திருப்பதால், இந்த மாநிலத்திலுள்ள பல ஆறுகளில் நீர் மட்டம் ஆபத்தான அளவை எட்டியிருக்கிறது.

படத்தின் காப்புரிமை AP
Image caption ஒரோ நாளில் பெய்த 25 சென்டிமீட்டர் மழையால் அறுகளில் நீர்மட்டம் ஆபத்தான அளவை எட்டியிருக்கிறது

இங்குள்ள மிகவும் புகழ்பெற்ற உல்லாச ஓய்விடங்களில் ஒன்றான கிரீன்பிரியர் மூடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது, மக்கள் வீடுகளின் கூரைகளில் இருந்தும், நீர்சுழல்களில் இருந்தும் மீட்கப்பட்டிருக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை AP
Image caption 60 ஆயிரம் கட்டிடங்களில் மின்சார இணைப்பு துண்டிப்பு. அவசர நிலை பிரகடனம்

இந்நிலையில், அவசர நிலைய அறிவித்திருக்கும் ஆளுநர் இயரல் ரேய் டாம்பிலின், 60 ஆயிரம் கட்டிடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், பரவலாக சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறார்.