பிரிட்டனின் விலகல்: ''உலகப் பொருளாதாரத்தில் நீண்ட தாக்கத்தை ஏற்படுத்தும்'' - சீனா

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற பிரிட்டன் எடுத்திருக்கும் முடிவானது, உலகப் பொருளாதாரத்தில் நீண்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சீனா தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றித்தை விட்டு விலகுவதால் ஏற்படும் விளைவுகளை கணிப்பது கடினமானது. இன்னும் பத்தாண்டுகள் அவை உணரப்படும் - லோவ் ஜிவெய்

விளைவுகளை கணிப்பது மிகவும் கடினமானது. ஆனால், இன்னும் பத்தாண்டுகள் அவை உணரப்படும் என்று சீன நிதி அமைச்சர் லோவ் ஜிவெய் தெரிவித்திருக்கிறார்.

இருந்தபோதிலும், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகும் வாக்கெடுப்பை தொடர்ந்து சந்தைகள் மிகைப்படுத்தியே எதிரெலித்திருக்கின்றன என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இந்த விளைவுகளை பற்றிய புறநிலை பார்வையை உலகம் பெறுவதற்கு முன்னால் அவற்றை அமைதிப்படுத்திவிட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.