ஐரோப்பிய ஒன்றியத்தோடு புதிய உறவை உருவாக்குவது யார்?

ஐரோப்பிய ஒன்றியத்தோடு ஒரு புதிய உறவை உருவாக்குவது பற்றிய பேச்சுவார்த்தைகளில் பிரிட்டனை யார் வழிநடத்துவார் என்று அனுமானங்கள் தொடர்கின்றன.

Image caption டன்கன் ஸ்மித்

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது தொடர்பான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பின் முடிவுகள் வெளிவந்து இரண்டு நாட்கள் ஆகியிருக்கும் நிலையில் இந்த அனுமானங்கள் வருகின்றன.

அக்டோபர் மாதம் பதவி விலக உள்ளதாக பிரதமர் டேவிட் கேமரன் அறிவித்த பிறகு, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியில் தலைமைக்கான போட்டி தொடங்கியுள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption ஹாம்மோண்ட்

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக வேண்டும் என்று பரப்புரை செய்த கன்சர்வேட்டிவ் கட்சியின் இயன் டன்கன் ஸ்மித், பிரிட்டன் விலகுவதை ஆதரிக்கும் ஒருவர்தான் புதிய பிரதமராக வர வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

கேமரன் போன்று, கன்சர்வேட்டிவ் கட்சியின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருக்க வேண்டும் என்று பரப்புரை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பாவின் ஒருமித்த சந்தையில் இருப்பதன் அவசியம் மற்றும் குடியேற்றத்தை குறைக்கும் விருப்பம் ஆகியவற்றிற்கு இடையிலான முரண்பாட்டிற்கு பிரிட்டன் தீர்வு காண வேண்டியிருக்கும் என்று பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் பிலிப் ஹாம்மோண்ட் கூறியிருக்கிறார்.