ஃபலூஜா நகரம் மீட்கப்பட்டதாக இராக் பிரதமர் அறிவிப்பு

  • 26 ஜூன் 2016

ஐ.எஸ் போராளிகளிடமிருந்து ஃபலூஜா நகரை மீட்டுவிட்டதாகவும், இது குறித்து இராக் மக்கள் மகிழ்ச்சியடையலாம் என்றும் இராக் பிரதமர் ஹைதர் அல் அபடி அறிவித்துள்ளார்..

படத்தின் காப்புரிமை AP

பலூஜா நகரின் முக்கிய மருத்துவனை ஒன்றின் வெளியே, இராக் நாட்டு கொடியை அசைத்தவாரு தொலைக்காட்சி ஒன்றில் தோன்றினார் அபடி.

ஐ.எஸ் அமைப்பினரின் பிடியிலிருந்த இராக்கின் மிகப்பெரிய நகரான மொசூலில், பாதுகாப்பு படையினர் இராக் கொடியை உயர்த்துவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ராணுவ அதிகாரி ஒருவர், பல வாரச் சண்டைக்கு பிறகு ஃபலூஜா நகருக்கான போர் முடிவுக்கு வந்ததாக அறிவித்திருந்தார்.

ஒரு வாரத்திற்கு முன்பு இராக் அரசு இதே போன்று, பலூஜா நகரை விடுவித்ததாக கூறியிருந்தது ஆனால் தெருக்களில் சண்டைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.