உலகப் பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்து சீனா, ஜப்பான், தென் கொரியா நாடுகள் கவலை

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக பிரிட்டன் வாக்களித்திருப்பதை தொடர்ந்து, பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்து சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் கவலை வெளியிட்டுள்ளன.

படத்தின் காப்புரிமை
Image caption கிழக்கு ஆசிய நிதி சந்தையில ஏற்படும் கொந்தளிப்பை எதிர்கொள்ள சீனா, ஜப்பான், தென் கொரியா நாடுகள் தயாராகி வருகின்றன

இது, உலகப் பொருளாதாரத்தில் நீண்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சீனாவின் நிதியமைச்சர் லோவ் ஜிவெய் கூறியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption பிரிட்டனின் முடிவு உலகப் பொருளாதாரத்தில் நீண்ட தாக்கத்தை ஏற்படுத்தும் - சீனா

நிதி சந்தைகளில் ஏற்படும் கடும் மாற்றங்களுக்கு பதிலளிப்பதற்கு டோக்கியோ தயாராக இருக்க வேண்டும் என்று ஜப்பானின் ஆளும் கட்சியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

பிரிட்டனின் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பின் முடிவு உலகப் பொருளாதார ஒழுங்கை மாற்றும் என்று தென் கொரியா கூறியுள்ளது.

திங்கள்கிழமை கிழக்கு ஆசியாவில் நிதி சந்தை திறக்கும்போது ஏற்படும் கொந்தளிப்பை எதிர்கொள்ள இந்த மூன்று நாடுகளும் தயாராகி வருகின்றன.