ஜெரூசலத்தில் ஒரு பாலுறவுக்காரர்கள் பேரணியில் தாக்குதல் நடத்திய நபருக்கு ஆயுள் சிறை

  • 26 ஜூன் 2016
படத்தின் காப்புரிமை AP
Image caption இஷாய் ஷ்லிஸெல்

கடந்தாண்டு ஜெரூசலத்தில் நடைபெற்ற ஒரு பாலுறவுக்காரர்கள் பேரணியில், இளம் பெண் ஒருவரை குத்தி கொலை செய்து பலரை காயப்படுத்திய நபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி இஸ்ரேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடவுளின் விருப்பத்தை தான் செய்ததாக தாக்குதலை மேற்கொண்ட போது இஷாய் ஷ்லிஸெல் கூறியுள்ளார்.

அவர் அதி பழமைவாத யூதர் என்பது குறிப்பிடத்தக்கது.

2005 ஆம் ஆண்டு ஜெரூசலத்தில் நடந்த ஒரு பாலுறவுக்காரர்கள் பேரணியில் இதே போன்று ஒரு தாக்குதலை நிகழ்த்தியதற்காக சிறைத்தண்டனை பெற்று சில வாரங்களுக்குமுன் தான் விடுதலையானார்.

ஷ்கிஸெல் ஆபத்து மிக்கவர் என்பதை போலிஸ் அறிந்திருந்தும் முறையாக செயல்படவில்லை என போலிஸை நீதிமன்றம் விமர்சித்துள்ளது.