ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உயர் அதிகாரி ஒருவரை அனுப்புகிறது அமெரிக்கா

  • 26 ஜூன் 2016
படத்தின் காப்புரிமை AFP

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற வாக்களித்ததை தொடர்ந்து ஏற்பட்டுள்ள நெருக்கடியில் அமெரிக்கா தலையிட உள்ளது. அமெரிக்காவின் உயர் அதிகாரி ஒருவரை அந்த பகுதிக்கு அமெரிக்க அனுப்ப உள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜான் கெர்ரி உடன் ரோமுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிகாரிகள், திங்கட்கிழமை அன்று கெர்ரியின் பயணத்தில் இரு நிறுத்தங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், முதலில் பிரஸ்ஸல்ஸ் அடுத்தது லண்டன் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தை மேலும் பலவீனமாக்கும் விதமாக பிரிட்டன் முடிவை மற்ற நாட்டு உறுப்பினர்கள் யாரும் பின்பற்ற கூடாது என்பதன் முக்கியத்துவத்தை கெர்ரி வலியுறுத்துவார் என அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்திருக்க வாக்களிக்க வேண்டும் என்று மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடைபெற ஒரு வாரத்திற்குமுன், பிரிட்டிஷ் மக்களை அமெரிக்க அதிபர் ஒபாமா வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.