விரிவாக்கப்பட்ட பனாமா கால்வாய் விரைவில் திறப்பு

  • 26 ஜூன் 2016

ஏறக்குறைய பத்தாண்டுகள் நடைபெற்ற நீண்ட விரிவாக்கத்திற்கு பிறகு, புதிதாக விரிவாக்கப்பட்டுள்ள பனாமா கால்வாய், கப்பல் போக்குவரத்திற்கு திறக்கப்பட இருக்கிறது.

படத்தின் காப்புரிமை
Image caption ஏறக்குறைய பத்து ஆண்டுகள் நடைபெற்ற விரிவாக்கப் பணிகளுக்கு பின்னர் புதிதாக விரிவாக்கப்பட்ட பனாமா கால்வாய் திறக்கப்படவுள்ளது

சீனாவுக்கு சொந்தமான மிக பெரிய சரக்கு கப்பல் ஒன்று இந்த கால்வாயில் நுழையும் முதல் கப்பலாக இருக்கும்.

பின்னர் நடைபெற இருக்கின்ற திறப்பு விழாவில் எட்டு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.

படத்தின் காப்புரிமை
Image caption பனாமா நாட்டு அதிபர் சீன சமூகப் பிரதிநிதியுடன் சந்திப்பு (கோப்பு படம்). விரிவாக்கப்பட்ட பனாமா கால்வாய் திறப்பு விழாவில் எட்டு நாட்டு தலைவர்கள் பங்கேற்பர்

நாட்டிற்கு இதுவொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இருக்கும் என்று பனாமாவின் அதிபர் யுவான் கார்லோஸ் வாரிலா தெரிவித்திருக்கிறார்.

இந்த நீர்வழியை விரிவாக்கியிருப்பது, இந்த கால்வாயின் போக்குவரத்து எண்ணிக்கையை இரு மடங்காக்கும். ஒவ்வோர் ஆண்டும் ஆகின்ற கப்பல் போக்குவரத்து செலவுகளில் பல பில்லியன் அமெரிக்க டாலர்களை குறைக்கும்.

அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களை இணைக்கின்ற இந்த கால்வாய் தான், பனாமா நாட்டின் மிக பெரிய வருமான ஆதாரமாகும்.