தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட சோமாலிய அமைச்சருக்கு அஞ்சலி

  • 26 ஜூன் 2016
படத்தின் காப்புரிமை AFP

கடந்த சனிக்கிழமையன்று, இஸ்லாமியவாத தீவிரவாத குழுவான அல் ஷபாப், மொகதிஷு பகுதியிலிருந்த விடுதியில் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட சோமாலியா நாட்டு அமைச்சருக்கு, சோமாலிய, ஐ.நா மற்றும் வெளிநாட்டு அதிகாரிகள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

சோமாலியாவை சிறந்த நாடாக மாற்றும் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் என்றும், தேசிய சுற்றுச்சூழலுக்காக தீவிரமாக செயல்பட்டு வரும் வழக்கறிஞர் எனவும் சுற்றுச்சூழல் அமைச்சர் புரி ஹம்சாவை பற்றி விவரிக்கின்றனர்.

பிரபல விடுதிக்குள் நுழைவதற்காக அல் ஷபாப் தீவிரவாதிகள் கார் வெடிகுண்டை பயன்படுத்தி குறைந்தது 15 பேரை கொன்றார்கள்.

ஆனால், இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25க்கும் அதிகமாக இருக்கலாம் என்று ஐ.நா கூறியுள்ளது.