தெற்கு சூடான் மோதல்கள் குறித்து பான் கீ மூன் கவலை

தெற்கு சூடானில் நடைபெற்று வரும் மோதல்களின் அதிகரிப்பு குறித்து தான் ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக ஐநா பொது செயலாளர் பான் கீ மூன் கூறியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை முதல், தெற்கு சூடானில் உள்ள முக்கிய நகரமான வாவிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் தேசிய ராணுவத்துக்கும், ஆயுதம் தாங்கிய குழுக்களுக்கும் இடையே மோதல்கள் நடந்த வண்ணம் உள்ளன.

Image caption கோப்பு படம்

ஆயுதம் தாங்கிய குழுக்கள் யார் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. மோதல் நடைபெறும் இடங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பொது மக்கள் தப்பி சென்றுள்ளதாக உதவு குழுக்கள் தெரிவித்துள்ளன.

மோதல் நடைபெற்ற பகுதிகளில், கொள்ளையடித்தல் மற்றும் பொதுமக்களின் இறப்புக்கள் குறித்து சில தகவல்கள் வெளிவந்துள்ளன.

தெற்கு சூடானில் 2013 டிசம்பரில் வெடித்த உள்நாட்டு போரை நிறுத்திடும் நோக்கில் தேசிய ஒற்றுமை அரசு அமைக்கப்பட்டாலும், அந்நாட்டில் அதிகளவில் பதட்டம் நிலவி வருகிறது.

பல ஆயுதம் தாங்கிய போராளி குழுக்கள், அரசுடனான அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திடவில்லை.