அரசியல் தேக்கநிலையை முடிவுக்கு கொண்டு வர ஸ்பெயினில் தேர்தல்

  • 26 ஜூன் 2016

ஆறு மாதங்களுக்கு முன்னால் நடைபெற்ற பொதுத் தேர்தலை தொடர்ந்து உருவான அரசியல் தேக்கநிலையை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியாக ஸ்பெயின் வாக்காளர்கள் இன்று மீண்டும் வாக்களிக்க இருக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty
Image caption போடோமேஸ் தலைமையில் தொங்கு நாடாளுமன்றமே அமையும் என கருத்துக்கணிப்பு தகவல்கள் கூறுகின்றன

கன்சர்வேட்டிவ் ஜனரஞ்சகக் கட்சி மற்றும் சோஷியலிஸ்டுகளின் பாரம்பரியமான ஆதிக்கத்தை நீக்கிவிட்டு, தீவிர இடது போடோமோஸ் மற்றும் மத்திய வலது சியுடடானோஸ் என இரண்டு புதிய முக்கிய அரசியில் குழுக்கள் அப்போது தோன்றின.

படத்தின் காப்புரிமை Getty
Image caption பாரம்பரியமான ஆதிக்கத்தை நீக்கிவிட்டு, தீவிர இடது போடோமோஸ் மற்றும் மத்திய வலது சியுடடானோஸ் என இரண்டு புதிய அரசியில் கட்சிகள் வந்துள்ளன

கூட்டணி அரசு அமைக்க எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்ததால் இன்று நடைபெறும் தேர்தலை நடத்த வேண்டியதாயிற்று.

படத்தின் காப்புரிமை AFP
Image caption அரசியில் தேக்கநிலையை முடிவுக்கு கொண்டுவர ஸ்பெயினில் இன்று தேர்தல்

என்றாலும், ஸ்பெயினின் முக்கியமான மைய இடதுசாரி கட்சியாக இருக்கும் சோஷியலிஸ்டுகளை அகற்றிவிட்டு, அவ்விடத்தை போடோமோஸ் பெற்று தொங்கு நாடாளுமன்றமே அமையும் என்று கருத்துகணிப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.