மேற்கு வெர்ஜீனிய மாநில வெள்ளப்பெருக்கு பிரதான பேரழிவு - ஒபாமா

மேற்கு வெர்ஜீனிய மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை பிரதான பேரழிவு என்று அதிபர் பராக் ஒபாமா அறிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption மேற்கு வெர்ஜீனிய மாநில வெள்ளப்பெருக்கு பிரதான பேரழிவு - ஒபாமா

ஒரு நூற்றாண்டுக்கு மேலாக கண்டிராத இந்த மிக மோசமான வெள்ளப்பெருக்கால் 24 பேர் இறந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AP
Image caption நூற்றாண்டுக்கு மேலாக காணாத இந்த வெள்ளப்பெருக்கு 24 பேரை பலிவாங்கியுள்ளது

ஆளுநர் இயரல் ரேய் டாம்பிலினின் வேண்டுகோளுக்கு இணங்க மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மூன்று வட்டாரங்களுக்கு பெடரல் அரசின் உதவியை வழங்க ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை TWITTER
Image caption மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மூன்று வட்டாரங்களுக்கு பெடரல் அரசு உதவியளிக்க ஒபாமா உத்தரவு

இதனால் தற்காலிக வீடுகளை கட்டுவதற்கும் பழுதுகளை சரிசெய்வதற்கும் குடியிருப்புவாசிகள் உதவித் தொகைகளை இப்போது பெறுவர்.

30 ஆயிரம் வீடுகள் மற்றும் கடைகளில் மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AP
Image caption மேற்கு வெர்ஜீனீயாவில் பெய்த பேய் மழையால் உருவான வெள்ளம் பல நகரங்களை துன்டித்துள்ளது

வியாழக்கிழமை அங்கு பெய்த பேய் மழையால், நதிகள் மற்றும் நீரோடைகளிலிருந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி பல நகரங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான பேர் மீட்கப்பட்டுள்ளனர்,