பிரிட்டன் வாக்கெடுப்பின் எதிரொலி - பங்குச் சந்தைகள் வீழ்ச்சி

  • 27 ஜூன் 2016

பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக வேண்டும் என்று வாக்களித்த பிறகு, சில பங்குகள் விற்பனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் நிதிச் சந்தைகளில் மேலும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AP

பிரிட்டனில், வங்கித்துறை, சொத்து மற்றும் விமானப் போக்குவரத்துறை சந்தைகள் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

31 வருடங்களில் காணாத அளவில் டாலருக்கு நிகரான பவுண்டின் மதிப்பு சரிவை சந்தித்துள்ளது.

சந்தைகள் குறித்து எழுந்த அச்சத்தை குறைக்கும் வகையில், பிரிட்டனின் பொருளாதாரம் உறுதியாக உள்ளது என பிரிட்டனின் நிதியமைச்சர் ஜார்ஜ் ஆஸ்பார்ன் தெரிவித்திருந்தார்.

புதிய பிரதமர் பதவியேற்கும் வரை அவசரகால பட்ஜெட் எதுவும் இடம்பெறாது எனவும் தெரிவித்திருந்தார்.

பிரட்டனின் பொருளாதாரத்தில் சிறிய மாற்றம் தேவையெனினும், நடவடிக்கைகள் எடுப்பதற்கு முன்பு புதிய பிரதமர் வரும் வரை காத்திருப்பதே சிறந்தது என ஆஸ்பார்ன் தெரிவித்துள்ளார்.