மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்புக்கு பின் முதல்முறையாக கூடும் பிரிட்டன் அமைச்சரவை

  • 27 ஜூன் 2016

பிரிட்டனின் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பின் முடிவுகளுக்குப் பின்னர் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் முதல்முறையாக அவருடைய அமைச்சரவையை கூட்டியுள்ளார்.

Image caption மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு பின்னர் பிரிட்டனின் நாடாளுமன்றம் முதல்முறையாக கூடியுள்ளது

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றித்திடம் இருந்து வெளியேறுகின்ற வியூகங்களை கலந்தாய்வு செய்ய இந்த கூட்டம் நடைபெறுகின்றது.

நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொள்ளும் அதேவேளையில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்புக்கு அடுத்து, கன்சர்வேட்டிவ் கட்சி முன்னெடுக்கும் பாதை பற்றி இந்த உயர்மட்ட குழு கலந்தாய்வு நடத்துக்கிறது.

இன்னும் சில மணிநேரங்களில், மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் டேவிட் கேமரன் உரையாற்றவுள்ளார்.