துருக்கி இஸ்ரேல் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்படப்போவதாக அறிவிப்பு

  • 27 ஜூன் 2016

இஸ்ரேலியக் கடற்படை, ஆறு வருடங்களுக்கு முன் பத்து துருக்கிய ஆர்வலர்களைக் கொன்றதை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட பிளவை முடிவுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தம் இன்று உறுதிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவை சீராக்கும் ஒரு ஒப்பந்தம் எட்டியுள்ளதாக இரு நாட்டு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2013ஆம் ஆண்டு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேடன்யாஹு மற்றும் துருக்கி அதிபர் ரிசப் தாயிப் எர்துவான், தொலைபேசியில் சமாதான உரையாற்றியதிலிருந்து இரு நாட்டின் உறவும் வலுப்படுத்தப்பட்டது.

சமீப மாதங்களில் தீவிரப்படுத்தப்பட்ட பேச்சுவார்கள், இரு நாட்டு தூதவர்களையும் திருப்பி அனுப்புவதற்கு வித்திட்டுள்ளது.

இஸ்ரேலியக் கப்பற்படை, காசாவில் உள்ள பாலத்தீனர்களுக்கு உதவிகள் வழங்க சென்று கொண்டிருந்த துருக்கிக் கப்பல் ஒன்றில் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இரு நாட்டிற்குமான உறவில் பிளவு ஏற்பட்டது.